ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் ‘மாயக்கூத்து’. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெறுகின்றன. அந்த எழுத்தாளர் வீடு தேடி வருகின்றன. ”எங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றுங்கள், எங்கள் கேரக்டரை இப்படி மாற்றியது ஏன்” என்று சண்டைபோடுகின்றன. ”அது என் கற்பனை, என் இஷ்டபடிதான் எழுதுவேன்” என எழுத்தாளர் சொல்ல, அந்த கேரக்டர்களால் எழுத்தாளருக்கு பிரச்னைகள் வருகிறது. அந்த கற்பனை கதை கேரக்டர்கள், எழுத்தாளரை துரத்துகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பது மாயக்கூத்து கதை. இந்த படத்தில் மறைந்த நடிகர் டில்லிகணேஷ் பத்திரிகை எடிட்டர், பப்ளிஷர் ஆக வருகிறார். இப்படம் 25 லட்சத்தில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
