தெலுங்கில் உருவான கண்ணப்பா திரைப்படம் பான் இந்திய படமாக கடந்த ஜூன் 27ம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியானது. விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்த இந்த படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருந்தார். இதில் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜனாதிபதி மாளிகையில் சிறப்புக் காட்சியாக ராஷ்டிரபதி பவனில் திரையிடப்பட்டது. தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து மகிழ்ந்தனர்.
