தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகரான ராம் சரண், தனது 16-வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தற்காலிகமாக இந்த படத்திற்கு ‘ஆர்.சி 16’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்வி கபூர் நடித்துக் கொண்டிருக்கும் இது முதல் திரைப்படமாகும்.
இந்தப் படத்தை இயக்குநர் புச்சி பாபு இயக்குகிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றுகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் நகரத்தில் நடைபெற்று வந்தது. இப்போது அந்த கட்டமானது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படக் குழுவினரால் ஒரு முக்கியமான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 27, 2025 அன்று காலை 09.09 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.