சமீபத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அளித்த ஒரு பேட்டியில், இப்போது ரீல்ஸ் மூலமாக சில பாடல்கள் ஹிட் ஆகின்றன. ஆனால், ஒருமாதத்திற்கு பிறகு அவை பிளேலிஸ்ட்களில் இருப்பதில்லை. ஒரு பாடல் உண்மையில் ஹிட் ஆக வேண்டுமானால், ஒருமாதத்திற்குப் பிறகும் அது நம் பிளேலிஸ்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு சில பாடல்களைத் தவிர, மற்றவை நீடிப்பது இல்லை என்பதே உண்மை.

இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை நாம் இன்று வரை கேட்கிறோம் ஹிட் பாடல்கள் என கூறுகிறோம், ஏனெனில் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவை நம் பிளேலிஸ்ட்களில் இடம் பெற்றுள்ளன. இன்று கூட இந்த பாடல்களுக்கு மதிப்பு உள்ளது.
தற்போதைய இசையின் தரம் குறைந்து வருகிறது.
ஒரு பாடலின் 30 வினாடி லைன் போதும், அதை ஹிட் பண்ணிடலாம் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, முழு பாடலையும் கேட்க வைக்கும் நிலைக்கு திரும்ப வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.