2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படம் வெளியானபோது மிகுந்த பாராட்டைப் பெற்றதுடன், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’, மற்றும் ‘வாழை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தொடர்ந்து, ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘பைசன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.