சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “கூலி” இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். பரபரப்பான ஆக்ஷன் அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், சௌபின் சாகிர் நடித்திருக்கும் கதாபாத்திரம் ஆரம்பத்தில் பகத் பாசிலுக்காக எழுதியது என்றும், ஆனால் அவர் கால்சீட் பிரச்சனையால் அந்த வேடத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். மேலும், அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மாதங்களுக்கும் மேல் நேரம் எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
பகத் பாசில் “கூலி” படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், ரஜினிகாந்துடன் “வேட்டையன்” படத்தில் இணைந்து நடித்ததார். “கூலி” திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அதில் உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டோர் மிகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் எனவும் லோகேஷ் கூறியுள்ளார்.