தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ், தற்போது உலகமெங்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோவையில் நடந்த அவரது இசை நிகழ்ச்சி பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் அவரது இசையின் மேஜிக்கால் மயங்கி விட்டார்கள் என்றே கூறலாம். இதையடுத்து, அவர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இசை நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்று வரும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு ரசிகர்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் அளவிட முடியாதது. சமீபத்தில் கனடாவின் டொரண்டோவில் நடைபெற்ற அவரது கச்சேரி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அவரது இசைக்குழுவும் கலந்துகொண்டது.
இந்த நிகழ்ச்சிக்காக அந்நாட்டு அரசு ஹாரிஸை கௌரவித்து உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.