விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் தீவிர அரசியலில் ஈடுப்படவுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் 100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையை பார்ஸ் நிறுவனம் 78 கோடிக்கும் பெற்று இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இதுமட்டுமின்றி மற்ற மொழிகளுக்கான வியாபாரத்திற்கும் தற்போது பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். மேலும் ஏப்ரல் மாதத்தோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது.