சமீபத்திய நேர்காணலில் தேசிய விருது பெற்ற சமயத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “துரோகால் படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் இயக்குனராக இருந்த கோவிந்த் நிகாலனி, ஒரு பிரபல ஹோட்டலின் பெயரை கூறி, அங்கே திரையுலக முக்கிய பிரபலங்களுக்கு விருந்து ஏற்பாடு செய் என்று என்னிடம் சொன்னார். அந்த ஹோட்டலை நான் இதற்கு முன்பு வெளியில் இருந்து மட்டுமே பார்த்திருந்தேன்; உள்ளே சென்று சாப்பிட்டதோ, இருக்கை எடுத்ததோ எதுவும் இல்லை.

அந்த ஹோட்டலில் விருந்துக்கான ஏற்பாடுகளை செய்து முடித்தேன். ஆனால் செலவுகள் அதிகமாகிவிடுமோ என்ற பயத்தில் ஒரு கிளாஸ் ஓட்கா கூட குடிக்கத் தயங்கினேன். கையில் எளிய எலுமிச்சை நீர் வைத்துக்கொண்டு நின்றேன். காரணம், விருந்து முடிந்ததும் கட்ட வேண்டிய பில்லுக்கான பணம் என்னிடம் இல்லை. அந்த கவலை மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு தருணத்தில், இயக்குனர் கோவிந்த் நிகாலனியை தனியே அழைத்து, “சார், ஒருவேளை இந்த விருந்துக்கான பணத்தை நான் கட்ட முடியாவிட்டால் என்னாகும்? இங்கே ஹோட்டல் பாத்திரங்களை கழுவச் சொல்வார்களா? அல்லது போலீசுக்கு ஒப்படைப்பார்களா?” என்று கேட்டேன். என் நிலையை உணர்ந்த அவர், “இந்த விருந்துக்கான செலவை நான் தான் செலுத்துகிறேன்” என்று சொன்னவுடனே எனக்கு இருந்த அந்தப் பயம் அகன்று விட்டது. அதன்பிறகு மற்றவர்களைப் போல நானும் அந்த விருந்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டேன்” என கூறியுள்ளார்.