Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

பிரியாமணி நடித்துள்ள ‘குட் வைப்’ படத்தின் டீஸர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டார், அவரை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்ட ஒரு புதிய வெப் தொடரை அறிவித்தது.

இந்த வெப் தொடரை, புகழ்பெற்ற நடிகை மற்றும் இயக்குநரான ரேவதி இயக்கியுள்ளார். ‘குட் வைப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடர், பிரியாமணி நடிக்கும் முதல் தமிழ் வெப் தொடராகும்.

இத்தொடரில் பிரியாமணிக்கு இணையாக சம்பத் ராஜ் மற்றும் ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும், இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News