Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சஸ்பென்ஸ் திரில்லரில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ இன்று வெளியாகியவுள்ள முக்கிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி என்ற படத்தை, இயக்குநர் மற்றும் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி, இயக்கியுள்ளார்.

இறுதி முயற்சி திரைப்படம், சாதாரண பெட்டி கடை உரிமையாளர்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையை சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் திரைக்கதையாக அமைத்து, அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மெகாலி, மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீசர், நாளை மாலை 5 மணிக்கு, இயக்குநர் பாக்யராஜால் வெளியிடப்பட உள்ளது.

- Advertisement -

Read more

Local News