சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘பாட்ஷா’. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களில் பாட்ஷா என்றும் ‘டாப்’ எனலாம். தற்போது பாட்ஷா படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனதை முன்னிட்டும், சத்யா மூவிஸ் நிறுவனத்தின் 60வது ஆண்டு முன்னிட்டும் பாட்ஷா படம் நாளை (ஜூலை 18) உயர்தர டிஜிட்டல் வடிவில் ரீ ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
