ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில், சென்னை போயஸ்கார்டனில் தன்னை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லவரும் ரசிகர்களின் தீபாவளி வாழ்த்துகளை மனதார ஏற்று, பதிலுக்கு அவர்களுக்கு வாழ்த்து சொல்வது ரஜினிகாந்த் வழக்கம். அந்த வகையில் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு முன் குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லி அனைவரும் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார் ரஜினிகாந்த். ரஜினியை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
