பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், பிக் பாஸ் ரசிகர்களின் பிரியமான குயினாக இன்று வரை சீரிய இடத்தைப் பிடித்துள்ளவர், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் ஆவார்.


கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தொடர்ந்து 5 படங்களில் நடித்த ஷிவானி நாராயணன், அதன் பின்னர் ஒரு வருடமாக புதிய எந்தவொரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தினசரி தனது செயல்பாடுகளை பதிவிட்டு பிஸியாக இருக்கிறார்.


நடிகை ஷிவானி நாராயணன், பச்சை நிற மார்டன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். கடற்கரையில் ஜாலியாக விதவிதமாக அவர் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.