சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியலாக ‘சிறகடிக்க ஆசை’ மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த தொடரின் கதைக்களம், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மீனா மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான டாக்சி ஓட்டுநரான முத்து ஆகியோருக்கு எதிர்பாராத விதமாக நடந்த திருமணத்தை மையமாகக் கொண்டுள்ளது.


தற்போது, அவர்கள் மெதுவாக ஒருவரையொருவர் புரிந்துகொள்ள தொடங்குகிறார்கள். பல அம்சங்களையும், சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த தொடரில், மீனாவின் கதாபாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா மிகச்சிறப்பாக நடித்து வருகிறார். அண்மையில், எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் கையால் விருது பெற்ற கோமதி பிரியா, ரசிகர்களிடையே தனது இடத்தை மேலும் பலப்படுத்தியுள்ளார்.
சீரியலில் புடவையில் எளிமையான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த கோமதி பிரியா, சமீபத்தில் மார்டன் உடையில் ஸ்டைலிஷ் போஸ்களில் தோன்றி, இணையத்தை கலக்கி வருகிறார். இதைப் பார்த்த இணையவாசிகள், “சிறகடிக்க ஆசை சீரியலின் புடவையில் இருக்கும் மீனாவா இது? நம்பவே முடியவில்லை!” என்று ஆச்சர்யத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.