சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துவரும் ஹேமா ராஜ்குமார், தற்போது இயக்குனர் கமல் இயக்கத்தில் “நெல்லை பாய்ஸ்” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் அறிவழகன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பட விழாவில் பேசும்போது ஹேமா கூறியதாவது: ஒரு இயக்குநர் நினைத்த கதையை சமரசமில்லாமல் படமாக்குவதுதான் உண்மையான வெற்றி. அதே நேரத்தில் புதியவர்களுக்கும் அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
ஆடிஷனில் கலந்து கொள்ளும்போது சீரியல் நடிகை தானே? என்று கேட்டு, அதற்கேற்ப கதாபாத்திரங்களை ஒதுக்குகிறார்கள். இது எனக்கு மனசோர்வை ஏற்படுத்தியது. அதனால் ஒருசில நேரத்தில் ‘சினிமா வேண்டாம், சீரியலே போதும்’ என நினைக்கத் தொடங்கினேன். திறமையுள்ள டிவி நடிகர்கள், நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனவே, டிவி நடிகர்களுக்கு சினிமாவில் அதிக வாய்ப்பு வழங்க திரைத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று ஹேமா ராஜ்குமார் வேண்டுகோள் வைத்தார்.

