நடிகர் சிவா நடித்திருக்கும் படம் ‘சுமோ’ எனும் தலைப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ஹோசிமின். இதில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், உலகப்புகழ் பெற்ற மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஆரம்பத்தில் 2021ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று மற்றும் பிற காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. ‘சுமோ’ திரைப்படம் கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தாலும், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது இந்த படம் வரும் 25ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.