24 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடித்த ‘வல்லரசு’ படத்தை இயக்கியவர் என். மகாராஜன். இதே படத்தை ‘இந்தியன்’ என்ற தலைப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். பின்னர் அஜித் நடித்த ‘ஆஞ்சநேயா’ படத்தை இயக்கினார்.

தற்போது, 20 வருடங்களுக்குப் பிறகு சிவராஜ்குமார் நடிக்கும் ஒரு கன்னட படத்தை இயக்குகிறார். அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பிறகு சிவராஜ்குமார் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தை மும்பையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஆட்-ஒன் சார்பில் மனோஜ் பனோட் மற்றும் கெம்சந்த் காட்கி தயாரிக்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி, அதே ஆண்டின் இறுதியில் படம் வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படம் கன்னடத்தில் தயாரானாலும், பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.