Wednesday, April 10, 2024

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’அயலான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘அயலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News