Wednesday, April 10, 2024

வெளியான புஷ்பா 2 படத்தின் டீசர் !எகிறும் எதிர்பார்ப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் புஷ்பா 2. ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பாப்ர்பை ஏற்படுத்தி உள்ள இந்தப்படம் முதல் படம் ஹிட்டடித்து போல இந்த படமும் ஹிட் ஆகி அல்லு அர்ஜுனை இன்னும் வேற லெவெலுக்கு எடுத்து செல்லும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பாத்திருக்கிறார்கள்.

புஷ்பா 2 ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.அதேசமயம் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான இன்று புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி சினிமா உலகை கொண்டாட்டமாக்கி உள்ளது. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்து மெகா ஹிட்டான புஷ்பா திரைப்படம். பாகுபலி திரைப்படத்துக்கு பின்னர் பல மொழிகளில் ப்ளாக் பஸ்டர் ஆன தெலுங்கு படம் என்ற அடையாளத்தை பெற்றது.

இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து அசத்தியிருந்தனர். இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. புஷ்பா 2 படத்தின்படப்பிடிப்பு தொடங்கி வெகுவாக நடந்து வந்த நிலையில் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது. அச்சமயத்தில் இயக்குநர் சுகுமார் படத்தின் ஷூட்டிங் எடுத்ததவரையிலும் பார்த்தபோது திருப்தியடையாததால் மீண்டும் முதலில் இருந்து படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது வெறும் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டு இருந்த பொது கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் எனகாத்திருந்தார்கள்.

இப்போது ஸ்வீட் செய்தியாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருப்பதாலும் அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பதாலும்; பிற படங்களின் ரிலீஸுகள் தள்ளிப்போயிருப்பதாகவும்; ரஜினியின் வேட்டையன்கூட புஷ்பா 2 ரிலீஸால்தான் அக்டோபருக்கு தள்ளிப்போனதாக உறுதியற்ற ஒரு தகவல் உலாவி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

Read more

Local News