Wednesday, April 10, 2024

இளையராஜாவின் ரகசியம்!: சொல்கிறார் கார்த்திக் ராஜா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசை அமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் மூத்த மகனும் இசை அமைப்பாளருமான, கார்த்திக் ராஜா, பிரபல ‘டூரிங் டாக்கீஸ்’ யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவமங்களை பகிர்ந்துள்ளார்.

இவர், “சிறு வயதில் இருந்தே எனக்கு இசை மீது நாட்டம் இருந்தது. டிரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூசிக் நிறுவனத்தில் படித்தேன். மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் முறையான பயிற்சி பெற்றேன்.  டி. வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் மலையாள இசையமைப்பாளர் வெ. தட்சிணாமூர்த்தி ஆகியோரிடமிருந்தும் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றேன்.

குழந்தை பருவத்தில் இருந்தே, எனது தந்தையுடன் ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு வருவேன். எனது 13 வயதில் தமிழ்த் திரைப்படமான நினைக்க தெரிந்த மனம் (1987) படத்தின் ‘கண்ணுக்கம்..’ பாடலுக்கு  கீ போர்டு வாசித்தேன்”  என்று தெரிவித்தார் கார்த்திக் ராஜா.

அந்த வாய்ப்பை தனக்கு ஏன் இளையராஜா அளித்தார், இளையராஜாவின் இசை ரகசியம் என பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பேட்டியில் கார்த்திக் ராஜா பகிர்ந்துள்ளார். அவரது பேட்டியை முழுமையாக காண கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..

- Advertisement -

Read more

Local News