Wednesday, September 18, 2024

ஓங்கி அறைந்த சில்க்!  ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் ஷகிலா, பேட்டி ஒன்றில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றி கூறியுள்ளது வைரலாகி உள்ளது.

அதில், “நானும் சில்க் ஸ்மிதாவும், ஒரு படத்தில் அக்கா தங்கையாக நடித்தோம். அப்போது,சில்க் ஸ்மிதா அறைவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது நான், சில்க் ஸ்மிதாவிடம், ‘அக்கா, எப்படி அடிப்பீங்க, மெதுவா அடிப்பீங்களா’ என்று கேட்டேன். அதற்கு சில்க் ஸ்மிதா, ‘அது ஷாட்ல வந்துடும்.. அது ஒன்னும் டென்சன் இல்ல..’  என்றார்.

ஆனால், அந்த ஷாட்டின் போது இயக்குனர் ஆக்க்ஷன் சொன்னதும் சில்க் ஸ்மிதா, என் கன்னத்தில் ஓங்கி பளார் என்று உண்மையாகவே அடித்துவிட்டார். வலி தாங்காமல், நான் அழுதே விட்டேன். அப்படி ஒரு அடி!

பலர் முன்னிலையிலும் சில்க் ஸ்மிதா என்னை அடித்தது தனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதில் இருந்து எனக்கு சில்க் ஸ்மிதா என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், அவர் இறந்த பிறகு அவரை பற்றி எனக்கு புரிகிறது அவரை போல ஒரு அழகி கிடையாது, மிகவும் திறமைசாலி” என்று ஷகீலா அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News