Tuesday, October 8, 2024

டிரைலரில்-யே மொத்த படத்தையும் பார்ப்பதைபோல் உணர வைத்த’சிங்கம் அகைன்’ டிரைலர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷாரூக்கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தை இயக்கிய ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர், ரன்வீர் சிங், அக்ஷய் குமார், தீபிகா படுகோனே, டைகர் ஷெராப், அர்ஜுன் கபூர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கம் அகைன்’.இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியுப் தளத்தில் வெளியானது. டிரைலர் மட்டுமே 5 நிமிடம் வரை ஓடுகிறது. அதில் படத்தில் உள்ள அனைத்து முக்கிய காட்சிகளையும் காட்டியது போல, ஒரு முழு படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.இப்படி ஒரு டிரைலரை இதுவரை பார்த்ததில்லை என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ராமாயணக் கதையின் காட்சிகளுடன் இப்படத்தின் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே பாலிவுட்டின் அன்றைய, இன்றைய முன்னணி நட்சத்திரங்கள்தான் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News