நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது ‘விண்ணை தாண்டி வருவாயா’. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்தார். விடிவி கணேஷ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.நேற்று, இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் பிடித்த காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து இந்த நினைவுகளை கொண்டாடினர்.

இதையடுத்து, சிம்பு மற்றும் விடிவி கணேஷ், nostalgiya-யை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளனர்.சிம்பு கூறியதாவது, விண்ணை தாண்டி வருவாயா’ படம் வெளியானபோது மிகப்பெரிய ஹிட் அடித்தது. மீண்டும் திரையரங்குகளில் வெளியானபோதும் 1000 நாட்களைக் கடந்தும் ஓடியது. இது ஒரு மாயாஜாலப் படம். இப்போதும் ரசிகர்கள் அதைப் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறார்கள், அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான், த்ரிஷா மற்றும் படக்குழுவின் அனைவருக்கும் இதற்கான கிரெடிட் செல்கிறது” என்றார்.
அதற்குப் பின்னர், விடிவி கணேஷ், சிம்புவை நோக்கி “இங்க என்ன சொல்லுது, ஜெஸ்ஸி… ஜெஸ்ஸினு சொல்லுதா?” என கேட்டார். அதற்கு சிம்பு “இப்போலாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல… வேற சொல்லுது” என்று ஜாலியாக பதிலளித்தார்.