மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியை சேர்ந்தவர் நிகிதா போர்வால். அந்த மாநிலத்தின் முன்னணி தொலைக்காட்சி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் உள்ளார். 18வது வயதில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 60க்கும் மேற்பட்ட டி.வி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மிஸ்.இந்தியா போட்டியின் மூலம் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மிஸ் இந்தியா 2024ம் ஆண்டு அழகி போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில அளவில் வெற்றி பெற்ற 30 அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ‘மிஸ் இந்தியா 2024’ பட்டத்தை நிகிதா போர்வால் பெற்றார். தாத்ரா நகர் ஹைவேலியை சேர்ந்த ரேகா பாண்டே 2-வது இடத்தையும், குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலாக்கியா 3-வது இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற நந்தினி குப்தா நிகிதாவுக்கு கிரீடம் சூட்டி கவுரவித்தார். முன்னாள் மிஸ் இந்தியா அழகியும், நடிகையுமான நேகா தூபியா, நிகிதா போர்வாலுக்கு சால்வை அணிவித்தார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more