தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். ‘லீதா’, ‘எஸ்கேப் லைப்’ போன்ற தொடர்களில் நடித்ததோடு, தமிழில் ‘நவரசா’ வெப் தொடரில் நடித்திருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வெப் தொடரில் நடிக்கிறார். அந்த தொடர் ‘அன்கஸ்டமைஸ்டு எர்த்’ (பழக்கமற்ற பூமி) எனப் பெயரிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர், எட்டு எபிசோடுகளைக் கொண்டதாக உருவாகிறது.
ரித்தேஷ் பத்ரா இயக்கும் இந்த தொடரில், சித்தார்த் உடன் பிரிடா பின்டோ நாயகியாக நடிக்கிறார். ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் இணைந்து இந்தத் தொடரை தயாரிக்கின்றன.