Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

எஸ்.பி.பி.யை வெறுப்பேற்றிய இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. அதே போல, பாடகர்களில் மணி மகுடமாய் திகழ்ந்தவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து அளித்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தவை.
தவிர இருவரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கியவர்கள்.
இருவரும் இணைந்து 350 படங்கள் வரை பணியாற்றி இயிருக்கின்றனர். எஸ்.பி.பியின் குரலில் இந்தி, மலையாளம் இரண்டு மொழிகளிலும் மிகவும் குறைவான பாடல்களையே இசைத்திருக்கும் இளையராஜா, தமிழிலும் தெலுங்கிலும் மிக அதிகமான பாடல்களை அளித்துள்ளார்.
இளையராஜா இசையில் அதிகப் பாடல்களைப் பாடிய பாடகர்களில் எஸ்.பி.பி. முதன்மையானவர்.
ஆனால், ஒரு முறை கூட இளையராஜா எஸ்.பி,பி பாடியதை நன்றாக இருக்கிறது என சொன்னதே இல்லையாம். இது எஸ்.பி.பி.க்கு ஒரு ஆதங்கமாகவே இருந்து வந்தது.

ஒருமுறை, ஒரு தெலுங்கு படத்திற்காக இளையராஜா எஸ்,பி.பிக்கு சொல்லிக் கொடுக்காமல் அவரே பாடி ரெக்கார்டு பண்ணி கேசட்டை கொடுத்தாராம். அதில் கேட்டு அப்படியே பாடு என்றாராம்.

எஸ்.பி.பியும் அதே மாதிரி இளையராஜா எப்படி பாடியிருந்தாரோ அதே மாதிரி பாடி விட்டாராம். ஆனால் அந்தப் பாடலை படத்தில் வைக்க வில்லையாம். அதே நேரத்தில் அந்தப் பாடலும் மிக நன்றாக வந்து இருந்தது.
அப்போதுதான் ‘இந்தப் பாடலை அருமையாக பாடியிருக்கிறாய் என்றாராம்.
இதை கேட்டதும் எஸ்,பி,பி ‘அப்பாடா இந்த வார்த்தையை கேட்பதற்கு எவ்வளவு வருடம் போராட வேண்டியிருக்கு. இப்படி பாராட்டாமல் எத்தனை வருடங்களாக டார்ச்சர் செய்திருக்கிறார் நீ’ என்றாராம் மகிழ்ச்சியாக. கூறினாராம்.
இதை எஸ்.பி.பி.யே சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News