தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற நிலையைப் பெற்றுள்ளார் சந்தானம். 2016-ஆம் ஆண்டு அவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் 2023-இல் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் இதன் மூன்றாவது பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உருவாகி இருக்கிறது.

இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க, இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கி முடித்துள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகின்ற 16ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில், ரசிகர்கள் இந்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தற்போது இந்த படத்திற்கு தணிக்கை வாரியத்திலிருந்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.