இயக்குனர் நெல்சன் திலீப்ப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படம் ‘ஜெயிலர் 2’. ஏற்கனவே இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்திய தகவலின்படி, இப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார். அவரின் கேரக்டர், ரஜினியின் கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் வகையில் அமைந்துள்ளது என கூறப்படுகிறது. சந்தானம் சம்பந்தமான காட்சிகள் அடுத்த மாதத்தில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சந்தானம் ரஜினியுடன் ‘எந்திரன்’, ‘குசேலன்’, ‘லிங்கா’ போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

