Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“கணவரை பிரிகிறேன்” – சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தானும், தனது காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டதாக நடிகை சமந்தா இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

நடிகை சமந்தாவிற்கும், அவரது கணவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டேயிருந்தன.

இந்தச் செய்திக்கு ஆதாரம் அளிப்பதைப் போல அதுவரையிலும் சமந்தா அக்கினேனி என்ற குடும்பப் பெயரில் டிவிட்டர் ஐடியில் இருந்த சமந்தா திடீரென்று தனது பெயரில் இருந்த அக்கினேனியை நீக்கிவிட்டார். இதையடுத்து சமந்தா அந்தக் குடும்பத்தில் இருந்து விலகப் போவதாகச் செய்திகள் எட்டுத் திக்கும் பரவின.

இதற்கு அச்சாரமாக நாகார்ஜூனாவின் பிறந்த நாளைக்கு சமந்தா வாழ்த்துத் தெரிவிக்க.. சமந்தாவைத் தவிர மற்றவர்களுக்கு நாகார்ஜூனா நன்றி தெரிவித்ததும்.. லவ் ஸ்டோரி படம் தொடர்பான பேட்டியில் பத்திரிகைகள் தனது பெர்ஸனல் லைபை தோண்டித் துருவுவதாக நாக சைதன்யா புலம்பினாலும் டைவர்ஸ் பற்றியோ, பிரிவு பற்றியோ ஒரு வார்த்தைகூட சொல்லாதது இந்தச் செய்தி உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.

இன்றைக்கு சமந்தா தனது டிவீட்டர் பக்கத்தில் இந்தச் செய்தி உண்மைதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தேவிட்டார்.

சமந்தா வெளியிட்டிருக்கும் செய்தியில், “நானும் சைதன்யாவாவும் கணவன்-மனைவி என்ற உறவில் இருந்து விலகுகிறோம். அவரவர் பாதையில் செல்லப் போகிறோம். நாங்கள் இருவரும் கொண்டிருந்த நட்பு என்றென்றும் விலக்க முடியாத ஒரு பந்தமாகத் தொடரும்.

எங்களுடைய இந்த வித்தியாசமான காலக்கட்டத்தில் அடுத்தக் கட்ட நகர்விற்கு எங்களுடைய ரசிகர்களும், நலம் விரும்பிகளும், பத்திரிகையாளர்களும் எங்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுக்குய்யா இம்புட்டு காதல், கல்யாணம் அலப்பறை கொடுத்தீங்க..!!?

- Advertisement -

Read more

Local News