ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் ஹிந்திப் படம் ‘சிக்கந்தர்’. இந்த வாரம், மார்ச் 30ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா அவரைவிட 31 வயது இளையவர். இதனால், சல்மான்கானை விட இளையவளாக இருக்கும் ஒருவருடன் ஜோடியாக நடிப்பது சரியானதா என்று பலரும் விமர்சனம் செய்து கமெண்ட்கள் எழுதியுள்ளனர்.
இந்த விவகாரத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பதிலளித்த சல்மான் கான், “என்னைவிட 31 வயது இளையவர் ஆன ராஷ்மிகா என் ஜோடியாக நடிப்பது அவருக்கும், அவருடைய தந்தைக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஒருநாள் ராஷ்மிகா திருமணம் செய்து கொள்வார், பிறகு ஒரு பெண் குழந்தைக்குத் தாயாவார். அந்தக் குழந்தை வளர்ந்து வந்த பிறகு அவளுடனும் நான் நடிக்கலாம். அதிலும் ராஷ்மிகாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நம்புகிறேன்,” என கூறினார்.