Monday, February 17, 2025

ரீ ரிலீஸில் வசூலை குவித்த சயீப் அலிகானின் பாலிவுட் படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் திரையுலகில், சனம் தேரி கசம் என்கிற டைட்டில் ரொம்பவே பிரபலமானது. எண்பதுகளில் கமல் இந்தியிலும் நடித்து வந்த சமயத்தில் அங்கே இதே டைட்டிலில் அவர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு சயீப் அலிகான், பூஜா பட் நடிப்பில் இதே டைட்டில் இந்த படம் 2009ல் வெளியானது. தொடர்ந்து கடந்த 2016ல் ஹர்ஷவர்தன் ரானே நடிப்பில் மீண்டும் சனம் தேரி கசம் என்கிற பெயரிலேயே இந்த படம் உருவானது. புதிய கதை அம்சத்துடன் ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர்.காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆச்சரியமாக இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. குறிப்பாக முன்பு வெளியான போது கிட்டத்தட்ட எட்டு கோடி மட்டுமே வசூல் செய்த இந்த படம் தற்போது ரீ ரிலீஸில் முதல் ஒரு வாரத்தில் மட்டும் 26 கோடி வசூல் செய்துள்ளதாம். நடிகர் அமிதாப்பச்சன் இந்த படம் குறித்தும் ஹர்ஷ வர்தன் ரானேவின் நடிப்பு குறித்தும் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News