Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

விஜய்யின் கன்னத்தில் பளார் என்று அறைந்த எஸ்.ஏ.சந்திரசேகர்… ஏன்? எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் களஞ்சியம் தமிழில் பூமணி, பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, கருங்காலி போன்ற படங்களை இயக்கிய பிரபலமானவர். சமீபத்தில் நமது டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டியளித்த இவர் தனது தனது திரையுலக பயணத்தில் நடந்த பல சுவாரஸ்யமான சினிமா அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார். அதில், நான் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் அசோசியேட் இயக்குனராக வேலை செய்தேன். இந்த படத்தை விஜய் மிகப்பெரிய அளவில் நம்பினார். பூவே உனக்காக படத்தின் மேல் கூட அவருக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் தன்னை மேலே கொண்டுவர வேண்டும் என அதிகம் நம்பிக்கை வைத்திருந்தார்.

இன்று மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் விஜய் இந்தளவுக்கு உயர அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் எப்படி காரணமாக இருந்தார் என்பதற்கு ஒரு சம்பவம் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படப்பிடிப்பு தளத்தில் நடந்தது. ஒரு பாடலுக்கான சில காட்சிகளை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். நடிகை சங்கவிக்கு ஓட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் நடிகர் விஜய்க்கு ஒதுக்கப்படவில்லை. அவரை மரத்துக்கு கீழ் அமரவைத்து மேக்கப் போட்டார்கள். விஜய்யை பொறுத்தவரை இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் விஜய்யுடன் இருப்பவர்கள் இதுகுறித்து அவரிடம் பேச அவர் ஒருகட்டத்தில் கடுப்பாகி விட்டார். பின்னர் பாடல் காட்சியை படமாக்கும் வரை பொறுமையாக இருந்த அவர, தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி வீசிவிட்டு கார் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கால் செய்து நடந்த விஷயத்தை கூறினார்கள். சிறிது நேரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுடைய கார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தது. அவருடைய காருக்கு பின்னால் விஜய் உடைய காரும் வந்தது. விஜய் காரை விட்டு இறங்கியவுடனே விஜய்யின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார்.மொத்த செட்டுமே இதைக்கண்டு அதிர்ந்து போனது . எஸ்.ஏ. சந்திரசேகர் அப்போது விஜய்யை பார்த்து சொன்ன விஷயம்… மேலும் இயக்குனர் களஞ்சியம் பகிர்ந்த இந்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள டூரிங் டாக்கீஸ்-ன் யூட்யூப் வீடியோ லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்.

- Advertisement -

Read more

Local News