கேப்டன் விஜயகாந்த், 1979ஆம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பெற்றவர். அதன்பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

1991ஆம் ஆண்டு ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியானது. இந்த திரைப்படம் விஜயகாந்தின் 100-வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த படம் ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் 4K தரத்தில், டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட உள்ளது. முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன் இந்த ரீ-ரிலீஸை நடத்த உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் விரைவில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.