Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

விமர்சனங்கள் என்னை எதுவும் செய்யாது… நான் நிறைய பார்த்துவிட்டேன் – நடிகை பாத்திமா சனா ஷேக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் நடிகையாக வலம் வரும் பாத்திமா சனா ஷேக், ‘தங்கல்’ திரைப்படத்தில் அமீர் கானின் மூத்த மகளாக நடித்ததன் மூலம் பெரும் புகழைப் பெற்றவர். தற்போது திரைப்படங்களில் கவர்ச்சியாடக நடித்து வரும் பாத்திமா சனா ஷேக், சமீபத்தில் எடுத்த சில செயல்கள் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளன.

ஒரு திரைப்பட விழாவில், ஒரு நடிகரின் பின்னால் சென்று வேண்டுமென்றே உரசியது, மைக் வைத்தபடியே அவதூறான சைகைகள் செய்தது, உதட்டைக் காட்டி ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியது போன்ற செயல்கள் எல்லையும் மீறி விட்டதாக மக்கள் விமர்சிக்கின்றனர்.

இதனால் சமூக வலைத்தளங்களில் வெகுவாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ரசிகர்கள், அவரது மீது கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தி, பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இதனை பாத்திமா சனா ஷேக் எதையும் கவலைப்படாமல், “எவ்வளவோ பாத்தாச்சு” விமர்சனங்களை என்னை எதுவும் செய்யாது என்ற பதிலளித்துள்ளார் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News