கங்குவா படத்திற்குப் பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛ரெட்ரோ’ படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மேலும் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில், நடிகை ஸ்ரேயா சரண் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த ‛ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ஆரம்பத்தில் இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ளது என தகவல்கள் வெளிவந்தன. ஆனால், பின்னர் இப்படம் ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதையாக உருவாகியிருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, ‛இந்த படத்தின் தலைப்பு டீசர் மற்றும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முக்கியமான காட்சிகளை பார்த்த சூர்யா, மிகுந்த மகிழ்ச்சியடைந்ததோடு, இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார்’ என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார்.