பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு இந்த திரைப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் காலத்தில் எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை என்றால் இந்த வாய்ப்பை பயன்படுத்த இந்த திரைப்படத்தை அந்த தேதியில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதியுடன், தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.