‘பேஷன்’, ‘பேஜ் 3’, ‘ஹீரோயின்’ போன்ற தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மதுர் பண்டார்கர், தற்போது தனது புதிய படமான ‘வைவ்ஸ்’–ஐ இயக்கி வருகிறார். இந்த படம் பெண்களின் மனஉணர்வுகள், தைரியம், பலம் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமூக நிலைகளை பிரதிபலிக்கக் கூடிய திரைப்படமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, மவுனி ராய், மற்றும் சோனாலி குல்கர்ணி ஆகியோர் முக்கியமான கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
அவர்களுடன் இஹாதான திலிபன், ராகுல் பகத், பிரியங்கா பாலாஜி, அர்ஜூன் பாஜ்வா, சித்தார்த் சிபில் உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் இதே பெயரில் வெளிவந்த ஹாலிவுட் வெப் சீரிஸின் அதிகாரபூர்வ ரீமேக் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.