இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் (திகில்) படங்கள் மிகப்பெரிய வசூலைச் செய்துள்ளன. “ஷைத்தான்”, “முஞ்யா”, “ஸ்ட்ரீ 2” போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தச் சூழலில், இதுவரை ஒரு திகில் படத்திலும் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது அந்த ஜானருக்குள் நுழைந்து இருக்கிறார்.

அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ள முதல் ஹாரர் திரைப்படம், “ஸ்ட்ரீ”, “ஸ்ட்ரீ 2”, “முஞ்யா” ஆகிய படங்களைத் தயாரித்த “மேட்காப்” நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகிறது.
“தாமா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, “முஞ்யா” திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ளார். இதில், ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, “தாமா” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. வரவிருக்கும் மே மாதத்திற்குள் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.