ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்து வரும் படம் ராமாயணா. நிதீஷ் திவாரி இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் முன்னோட்டம் ஜூலை 3ம் தேதியான நாளை காலை 11:30 மணிக்கு வெளியாக உள்ளது. அதன்படி ஐதராபாத்தில் பிரசாத் மல்டி பிளக்ஸில் டைட்டில் வீடியோவை வெளியிடுகிறார்கள். மேலும், மும்பை, டில்லி, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, பெங்களூர் என 9 முக்கிய இந்திய நகரங்களில் வெளியிடுகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த ராமாயணா படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
