Touring Talkies
100% Cinema

Friday, July 4, 2025

Touring Talkies

பாபநாசம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த் சார் தான் – இயக்குனர் ஜீத்து ஜோசஃப்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்து கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் “திரிஷ்யம்”. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமின்றி சீனா, கொரியா போன்ற உலக மொழிகளிலும் ரீமேக் ஆனது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் 2015-ல் வெளியானது. இதில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தை போல் தமிழிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

சமீபத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் அளித்த பேட்டியில், தமிழில் பாபநாசம் படத்தில் ரஜினி சார் தான் என் முதல் தேர்வு. ஆனால் படத்தில் காவல்துறை அவரை தாக்குவது போன்ற காட்சிகள் அவரது ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று எண்ணினேன்.அதற்கு பிறகு கமல் சார் இப்படத்தில் நடிக்க கமிட்டானார். இதை அறிந்த ரஜினிகாந்த் சார், அருமை வாழ்த்துகள் என உயர்ந்த மனதுடன் எங்களை வாழ்த்தினார் என்று கூறியுள்ளார்

- Advertisement -

Read more

Local News