நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு மொழியில் இவர் பவன் கல்யாண் உடன் இணைந்து நடித்த ‘ஓஜி’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அவர் முதல்முறையாக கதையின் முக்கிய நாயகியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ‛நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்குகிறார். இதற்கு முன்னதாக, பிரியங்கா மோகன் ‘மேட் இன் கொரியா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் கொரியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
தற்போது இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.