Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புஷ்பா 2 எனக்காக காத்திருக்கிறது… தமன் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் ஆச்சரியம்! #PUSHPA2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 2021-ல் வெளியான படம் ‘புஷ்பா’. அந்த படத்தின் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. நேரடி தெலுங்குப் படம் என்றாலும், தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பாடல்களும் பெரிதும் ரசிக்கப்பட்டு ஹிட்டானது.

‘புஷ்பா 2’ படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்துள்ளார். ஆனால், அண்மையில் வெளியான தகவலின்படி, படத்திற்கான பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை என கூறப்படுகிறது. இசையமைப்பாளர்கள் தமன் மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் தற்போது பின்னணி இசையை அமைத்து வருகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவோ, தேவி ஸ்ரீ பிரசாத் தரப்பிலோ எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நேற்று ஹைதராபாத்தில் பின்னணி பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமன், மேடையில் கார்த்திக்கிடம் பேசும் போது, ‘புஷ்பா 2 எனக்காக காத்திருக்கிறது’ என்று கூறி விட்டு சென்றார். இதனால் அப்படத்தின் பின்னணி இசையை தமன் அமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News