இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் நடிக்கிறார் சிம்பு. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. மேலும், சில காரணங்களால் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக செய்திகள் பரவின. அச்சமயத்தில் வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ அப்டேட் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது
இந்நிலையில் இந்த படம் குறித்த புரோமோவை அக்டோபர் 4-ந் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிம்பு- வெற்றிமாறன் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிப்பெரிய அளவில் உள்ளது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் முன்னதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.