கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவானது “பிரேமலு” திரைப்படம். இந்த படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதிய இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்தார். இப்படம் வெளியானது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இளங்காதலர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகளவில் 130 கோடி ரூபாய் வசூலித்தது.
இத்திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருந்தார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றினார். இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று படக்குழு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவித்திருந்தது.
தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும், திரைப்படம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.