நடிகர் பிரசாந்த், 1990களிலும் 2000ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலும் முன்னணி நடிகராக இருந்தார். பின்னர் சில காரணங்களால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன மற்றும் படங்களில் இடைவெளியும் ஏற்பட்டது. அதன்பின் அவர் நடித்த சில படங்கள் வெற்றிபெறாத நிலையில் இருந்தன.

மறைந்துபோன அந்த இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய 55வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது.
இயக்குநர் ஹரி, பிரசாந்தை வைத்து 2002ஆம் ஆண்டு ‘தமிழ்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தற்போது, அந்த கூட்டணி சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறது என்பதாலேயே இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.