தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் லவ் டூடே மற்றும் டிராகன் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.

அதேபோல் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘டியூட்’ திரைப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.