பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து ‘காதலன்’, ‘எங்கள் அண்ணா’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘மிஸ்டர் ரோமியோ’ உள்ளிட்ட பல மகிழ்ச்சிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

மேலும், பிரபுதேவா நடித்த ‘போக்கிரி’, ‘வில்லு’ போன்ற படங்களிலும் வடிவேலு தனது நகைச்சுவையால் கவனம் ஈர்த்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றாத நிலை ஏற்பட்டது. ஆனால், சினிமா தொடர்பான சில விழாக்களில் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர்.
இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா மற்றும் வடிவேலு மீண்டும் ஒரு புதிய படத்தில் சேர்ந்து நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தை ‘டார்லிங்’, ‘100’, ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இதனை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.