பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..?

பாகுபலி ஹீரோவான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக சக பாலிவுட் நடிகரான வருண் தவான் கிசுகிசு செய்தியை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.

நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தாலும் அவர் சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி படத்தில் நடிப்பதற்காக அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களை ஒதுக்கிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி காதலித்து வருகிறார்கள் என முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

அதன் பின் தற்போது பிரபாஸ் ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசு தொடங்கி இருக்கிறது. பிரபாஸை திருமணம் செய்ய விரும்புவதாக நடிகை கீர்த்தி சனோன் ஒரு பேட்டியில் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகரான வருண் தவான் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கீர்த்தி சனோன் காதல் பற்றி கூறி இருக்கிறார்.

“கீர்த்தி சனோன் சிங்கிள் இல்லை. அவர் பெயர் ஒரு ஆணின் இதயத்தில் எழுதப்பட்டுவிட்டது. அந்த ஆண் தற்போது தீபிகா படுகோன் உடன் ஷூட்டிங்கில் இருக்கிறார்” என கூறியதைடுத்து பாலிவுட் உலகில் பரபரப்பு எழுந்துள்ளது.

தற்போது பிரபாஸ்தான் தீபிகா உடன் ப்ராஜெக்ட் கே என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். அதனால் தற்போது பிரபாஸ் – க்ரித்தி சனோன் காதல் இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.