தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்திய திரையுலகில் குஷி கபூர், ‘லவ் டுடே’ திரைப்படத்தின் இந்தி பதிப்பான ‘லவ்யப்பா’ மற்றும் சயிப் அலிகானின் மகன் இப்ராகிம் அலிகானுடன் நடித்த ‘நாடானியன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், மும்பை விமான நிலையம் அருகே குஷி கபூரை சிறுவர்கள் சூழ்ந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பல சிறுவர்கள் குஷி கபூர் வந்த காரை மறித்து, தங்கள் மொபைல்கள் மூலம் அவருடன் செல்பி எடுக்க விரும்பி, கார் கண்ணாடியை கீழே இறக்குமாறு கூறும் காட்சிகள் காணப்படுகின்றன. அப்போது, சிரிப்புடன் கண்ணாடியை கீழே இறக்கி, அவர்களுடன் கைகுலுக்கி உரையாடிய பின் குஷி கபூர் அந்த இடத்தை விட்டு சென்றார்.